வணக்கம் பொங்கலூர் விழா

Update: 2022-12-26 17:14 GMT


பொங்கலூர் பொ.வெ.க.பள்ளியில் 80 ஆண்டுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்த வணக்கம் பொங்கலூர் விழா பள்ளியில் நடந்தது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வணக்கம் பொங்கலூர் என்ற முழக்கத்தோடு

பொங்கலூரில் உள்ளகஸ்தூரி ரங்கப்ப நாயுடு மேல்நிலைப் பள்ளி கடந்த 1890-ம் ஆண்டு திண்ணை பள்ளியாக தொடங்கப்பட்டது. 1923 -ம் ஆண்டு கஸ்தூரிரங்கப்ப நாயுடு முயற்சியால் ஆரம்பப் பள்ளியாக மலர்ந்தது. இன்று அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியாக பள்ளி செயலர் பார்த்தசாரதியின் நிர்வாகத்தில் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.இங்கு படித்த பல மாணவர்கள் விவசாயிகளாகவும், டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், அரசு உயர் பதவியிலும் உள்ளனர்.

இந்த பள்ளியில் 80ஆண்டுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணக்கம் பொங்கலூர் என்ற தலைப்பில் விழாவாக கொண்டாட முடிவு செய்தனர். இந்த விழா மிகச் சிறப்பாக நடக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டது. முதல் நாளான கடந்த 24-ந் தேதி முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி தங்கள் பணிய நினைவுகளை நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அந்த வகுப்பறைகளுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் விளையாட்டு மைதானத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், வணக்கம் பொங்கலூர் விழாமாலையில் பட்டிமன்றம் மற்றும் வள்ளி கும்மியாட்டம், வலசுப்பாளையம் குழுவின் காவடி ஆட்டமும் நடைபெற்றது.

சிலம்பாட்டம்

25-ந் தேதி 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் போட்டியும், 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைவலமும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் போது முன்னாள் மாணவர்களின் சார்பில் பள்ளிச் செயலர் பார்த்தசாரதிக்கு நற்செயலர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேய சிலம்ப கலைக்கூடத்தின் சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழு ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்