பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் - தமிழ்நாடு அரசு உத்தரவு

மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;

Update: 2024-06-18 11:32 GMT

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி ,சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும். இதற்காக ரூ.4.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களிலும் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்