ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு திருட்டு; 2 பேர் கைது
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்புக்கு வைக்கப்பட்டு இருந்த அரிசி, சீனி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி பாலக்கரை பகுதியில் அமராவதி ரேஷன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக திருச்சி செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி சரளா (வயது 36) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.மறுநாள் காலை வந்து பார்த்தபோது ரேஷன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்தபோது பொங்கல் தொகுப்புக்கு வைக்கப்பட்டு இருந்த 150 கிலோ அரிசி, 139 கிலோ சீனி மற்றும் எடைபோடும் எந்திரம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பூட்டை உடைத்து திருடியதாக தர்மா என்கிற தர்மராஜ் (29), தினேஸ்வரன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து எடைபோடும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.