பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோ ரெயிலில் 5 நாட்களில் 8.36 லட்சம் பேர் பயணம்

இதுவரை இல்லாத அளவு கடந்த ஜனவரி 13ஆம் தேதி மட்டும் 2,66,494 பயணிகள் மெட்ரோவில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2023-01-18 09:15 GMT

சென்னை,

பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு கடந்த ஜனவரி 13ஆம் தேதி மட்டும் 2,66,494 பயணிகள் மெட்ரோவில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

14-ம் தேதி 1.62 லட்சம் பயணங்கள், 15-ம் தேதி 1.08 லட்சம் பயணங்கள், 16-ம் தேதி 1.34 லட்சம் பயணங்கள், 17-ம் தேதி 1.65 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.13-ம் தேதி முதல் 17ம் தேதி வரை மெட்ரோ ரயிலில் 8.36 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்