சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி வழங்கி தொடங்கி வைத்தார். நகர தி.மு.க. செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி சரவணன், வழக்கறிஞர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின்படி நடந்தது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி இசக்கியப்பன், அலமேலு, செல்வராஜ், புஷ்பம், விஜயகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.