பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.;

Update:2023-01-10 01:24 IST

பொங்கல் பரிசு தொகுப்பு

அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 465 ேரஷன் கடைகள் மூலம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 210 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் அரியலூர் ெரயில் நிலைய சாலையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி, அந்த பணிைய தொடங்கி வைத்தார்.

மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை ரேஷன் கடைகளில் சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஆண், பெண் என தனித்தனி வரிசையாக நின்று ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுச்சென்றனர்.

புகார் தெரிவிக்கலாம்

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டபடி வந்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற அறிவுறுத்தப்பட்டது. மேலும் ேரஷன் கடைகளுக்கு வருகிற 13-ந் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும், தகுதியானவர்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் 04329-228321 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்