பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
அரிசி, சா்க்கரை ஆகியன ஏற்கெனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்,தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்படவுள்ளது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா். இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் தொடங்கப்படுகிறது. வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது