பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

குத்தாலம் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-09 18:45 GMT

சீர்காழி:

குத்தாலம் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

குத்தாலம்

குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் ஊராட்சி பழைய கூடலூர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பழையகூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். பழையகூடலூர் கூட்டுறவு வங்கி தலைவர் மோகன், செயலர் விஜயலட்சுமி, இயக்குனர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

இதில் ஒன்றிய குழு துணை தலைவர் முருகப்பா, குத்தாலம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, வடக்கு ஒன்றிய. செயலாளர் வைத்தியநாதன், மேக்கிரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். கொக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சின்னகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலா நாகேந்திரன் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்