பொங்கல் இலவச வேட்டி- சேலைகள் கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்டன
பொங்கல் இலவச வேட்டி- சேலைகள் கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு சார்பில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்க கூடிய இலவச வேட்டி, சேலைகள் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்திறங்கின.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கிருஷ்ணகிரி தாலுகாவிற்குட்பட்ட, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 434 ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும், 24 ஆயிரத்து, 465 வயது முதிந்த ஆதரவற்றோர் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படஉள்ளன.
இதில், 4 லட்சத்து, 63 ஆயிரத்து, 205 பேர் பயனடைவார்கள். பல வண்ணங்களில், 15 டிசைன்களில் சேலையும், ஐந்து டிசைன்களில் வேட்டியும் வந்துள்ளன. இவை அனைத்தும் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி விரைவில் தொடங்கும்" என்றனர்.