பொங்கல் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழா

கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு சந்தீப் நகர் திருநங்கைகள் குடியிருப்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு புத்தாடைகள், பொங்கல் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு கல்லூரிச் செயலர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்று பேசினார். கல்லூரி பொருளாளர் மகேஷ், கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், செல்வகணேஷ், காமராஜ், பாஸ்கரன் கலந்து கொண்டனர். இதேபோல ஈராச்சி பரிமேலழகர் இந்து நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளிச் செயலர் தங்கமாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில் முன்பு வண்ண கோலமிட்டு, ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பொங்கலிட்டு வழிபட்டனர். மாணவி கார்த்திகா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியையொட்டி பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவிகள் மானசா, ஹர்ஷினி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். முடிவில், மாணவி விஜயதர்ஷினி நன்றி கூறினார்.

உடன்குடி

உடன்குடி கீழபஜாரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். தனியார் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கலில் ரகுமான் மற்றும் ராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முனைவர் கலாவதி கார்த்தீசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் சிறப்பு, நாட்டுப்புற கலைகள் பற்றி எடுத்து கூறினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ராகவன், மணி, அகமது, முகைதீன், ஜெயநாத், பள்ளி மேலாண்மை தலைவர் ஜெயசுதா, துணைத்தலைவர் வேலம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் போலீஸ் நிலையம்

ஏரல் போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்ட மாயவன் தலைமை தாங்கினார். போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசார் பொங்கலிட்டனர்.

நிகழ்ச்சியில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி, முஸ்லிம் வணிகர் சங்க தலைவர் பாக்கர் அலி, கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் மணிவண்ணன், ஏரல் தி.மு.க. பேரூர் கழகச் செயலாளர் ராயப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், டாக்டர் மார்ட்டின் தாமஸ், வாழவல்லான் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்