பாலக்கோடு:
பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி ஊராட்சி பொப்பிடியில் உள்ள சின்னக்கா கோவிலில் 14-வது ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், பூனையன்கொட்டாய், நிலகுண்டஅள்ளி, சாமியார் நகர், ரெட்டியூரான்கொட்டாய், கூசுக்கல், முத்துகவுண்டன்காடு ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு தாரை தப்பட்டை முழங்க மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.