திருப்புவனம் பேரூராட்சியில்-பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் விழா திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.;
திருப்புவனம்
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் விழா திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பழையூர், கோட்டை, இந்திராநகர், புதூர் மற்றும் லாடனேந்தல், பழையனூர், திருப்பாச்சேத்தி ஆகிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்றது. விழாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவரும், பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் கலந்து ெகாண்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர செயலாளர் நாகூர் கனி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், மத்திய கூட்டுறவு வங்கி துணைபதிவாளரும், முதன்மை வருவாய் அலுவலருமான சேதுராமன், வட்டார கள அலுவலர் ஜெயலெட்சுமி, செயலாட்சியர் மாரி, துணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் லெட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, வெங்கடேசன், இளங்கோவன், மகேந்திரன், சேகர், மீனாட்சிசுந்தரம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.