தண்ணீர் திறக்க வலியுறுத்தி பொங்கல் வைத்த விவசாயிகள்
வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் பொங்கல் வைத்து வேண்டுதலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் பொங்கல் வைத்து வேண்டுதலில் ஈடுபட்டனர்.
வைகை அணை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாய் திட்ட கால்வாயில் கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்த நிலையில் இந்த ஆண்டும் வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோரிக்கை
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள 58 கால்வாய் தொட்டிப்பாலம் பகுதியில் உள்ள நாகமலையான் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து தண்ணீரை திறக்க சாமியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்து நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.