களை கட்டிய பொங்கல் பண்டிகை

Update: 2023-01-14 16:48 GMT


உடுமலை பகுதியில் கரும்பு விற்பனை களை கட்டியுள்ள நிலையில் கரும்பு விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

போகிப்பண்டிகை

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.பொங்கல் என்றாலே, உழவர்களின் ஓராண்டு உழைப்பில் விளைந்த செங்கரும்பும், மங்களத்தின் அடையாளமான மஞ்சள் கொத்தும் முக்கிய இடம் பிடிக்கும்.மேலும் போகிப் பண்டிகையான நேற்று மாலை வீடுகளில் பொங்கல் பூ (பீளைப்பூ), ஆவாரம்பூ, வேப்பிலை, மா இலை ஆகியவற்றைக் கொண்டு காப்பு கட்டி பொங்கல் பண்டிகையின் உற்சாகம் தொடங்கியது.

உடுமலை பகுதியில் ராஜேந்திரா சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.ஆனாலும் கரும்பு விற்பனை குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாட்டுப் பொங்கல்

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு சில மாதங்களுக்கு முன்பே கரும்பு விவசாயிகளிடம் முன் பணம் கொடுத்து கரும்பு முன் பதிவு செய்து கொள்கிறோம்.கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கம் காரணமாக பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை.இந்த ஆண்டில் கரும்பு விற்பனை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் விற்பனை மிக மந்தமாகவே உள்ளது.ரேஷன் கடைகளில் முழுக் கரும்பு வழங்கியதும் விற்பனை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு ஜோடி கரும்பு தரத்துக்கேற்ப ரூ 60 முதல் 100 வரை விற்பனை செய்கிறோம்.மாட்டுப் பொங்கலையொட்டி விற்பனை நன்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்