திருச்சியில் திறந்தவெளியில் கொட்டப்படும் கெமிக்கல் கழிவுகள் - தனியார் நிறுவனத்திற்கு மாசு கட்டுபாட்டு வாரியம் நோட்டீஸ்
துத்தநாக துகள்கள் காற்றில் கலந்து பரவுவதால், பொது மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.;
திருச்சி,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், அபாயகரமான துத்தநாக பித்தளை கழிவுகளை பொதுவெளியில் கொட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துத்தநாக துகள்கள் காற்றில் கலந்து பரவுவதால், அந்த பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், கெமிக்கல் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டி வரும் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.