காங்கிரஸ் கட்சி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-05 20:07 GMT

தஞ்சாவூர்;

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் அன்பரசன், ராஜன், சதாசிவம், ராஜ்குமார், சவுந்தரராஜன், பிரபு, ராஜேந்திரன், மதியழகன், செபாஸ்டின், சிகாமணி, பாஸ்கர், புலிகேசி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்றார். முடிவில் வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.எம்.ராஜூ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்