காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-14 22:01 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் அதானி குழுமத்தின் முறைகேட்டை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வலியுறுத்தியும் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் ஓ.வி. கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில விவசாய காங்கிரஸ் பிரிவு பொது செயலாளர் வெங்கடேஷ், ராமலிங்க ஸ்தபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் அதானி குடும்பத்தின் முறைகேட்டை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்