அ.தி.மு.க.வினர் ஆா்ப்பாட்டம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் அ.தி.மு.க.வினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-04 20:59 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை ஆா்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜி.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. தவமணி, பேரூர் கழக செயலாளர் எஸ். வைரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும் நிர்வாக சீர்கேட்டை களைய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவரும் திரளாக பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அலுவலகத்தில் நுழைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருநீலக்குடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்