திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-14 19:00 GMT

மயிலாடுதுறை;

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். நகர தலைவர் சீனி.முத்து, ஒன்றிய தலைவர்கள் இளங்கோவன், குத்தாலம் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தளபதிராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் மற்றும் பலர் கலந்து கொண்டு அரசு வங்கிகளில் தமிழர்களை பணிக்கு அமர்த்துவதை தவிர்த்து வரும் போக்கை கண்டித்து கோஷம் எழுப்பினா்.

Tags:    

மேலும் செய்திகள்