காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-07 21:32 GMT

கும்பகோணம் ;

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஓ.வி.கே. கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஓ.வி.கே வெங்கடேஷ், பேராசிரியர் ராமலிங்க ஸ்தபதி, வி.கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்