மாற்றுக்கட்சியினர், அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சீர்காழியில் மாற்றுக்கட்சியினர், அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-08-07 17:13 GMT

சீர்காழி;

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மேலமாரியம்மன் கோவில் தெருவில் பல்வேறு கட்சியினர் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர் நற்குணன், சந்திரசேகரன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன் வரவேற்று பேசினார். விழாவில் பல்வேறு கட்சிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க.வில் இணைந்த அனைவருக்கும் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், பொறியாளர் மார்கோனி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்