இந்து மக்கள் கட்சியினர் 11 பேர் கைது

நாகநாதசுவாமி கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-28 21:51 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சவாமி கோவில் எதிரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி குருமூர்த்தி தலைமையில் 11 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரையும் திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்