பா.ஜனதா மாவட்ட நிர்வாகி கைது
நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் படத்தை அவமதித்த பா.ஜனதா மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் கடந்த 7-ந் தேதி மாலை இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சதா.சதீஷ் முத்தரசன் உருவப்படத்தை அவமதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சதா.சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.