சுல்தான்பேட்டை
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜே.கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் முன்பு மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஜ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.