காந்தி, காமராஜர் உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி, காமராஜர் உருவச்சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-10-02 18:45 GMT

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி, காமராஜர் உருவச்சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காந்தி, காமராஜர் உருவச்சிலை, உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் உருவச்சிலைகளுக்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மாநகர துணை தலைவர் பிரபாகரன், மார்க்கஸ், சின்னகாளை, மாவட்ட செயலாளர் கோபால், பொதுச்செயலாளர் மைக்கேல், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர் உருவச்சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ், மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவைத் தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

தூத்துக்குடி 30-வது வட்ட அ.ம.மு.க. சார்பில் டூவிபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காந்தி, காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் காசிலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீர புத்திரன், வட்ட கழக பொருளாளர் சுப்பையா, வக்கீல் ஜான் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்