பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லை மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Update: 2022-12-24 21:54 GMT

நெல்லை மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் நினைவு தினம்

பெரியார் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் பெரியார் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் திராவிடர் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மாநகர துணை செயலாளர்கள் சுதா மூர்த்தி, மூளிகுளம் பிரபு, எஸ்.வி.சுரேஷ், நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கணேஷ்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், இளைஞர் அணி ஆறுமுகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், சிறுபான்மை அணி அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.

நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நெல்லை மாநகர் மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் காசி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வேல்முருகன், துணைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ராதாபுரம் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜோசப் பெல்சி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மூன்றடைப்பு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் மூன்றடைப்பில் தந்தை பெரியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதி லிங்கேசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.                 

Tags:    

மேலும் செய்திகள்