காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2023-07-15 19:24 GMT

நெல்லையில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காமராஜர் பிறந்த நாள்

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் தி.மு.கவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் ஞானதிரவியம் எம்.பி., மேயர் பி.எம்.சரவணன், முன்னாள் எம்.பி.க்கள் விஜிலாசத்யானந்த், வசந்தி முருகேசன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சுந்தர், நித்திய பாலையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர துணை செயலாளர் மூளிக்குளம் பிரபு, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர்கள் சுதாபரமசிவன், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், ஸ்ரீவை.சின்னதுரை, கொள்கை பரப்பு துணைசெயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், வக்கீல் ஜெயபாலன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நெல்லை பரமசிவன் தலைமையில் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியினர் நெல்லை சந்திப்பு ம.தி.தா. பள்ளி முன்பு இருந்து முளைப்பாரி எடுத்து மேளதாளம் வழங்க ஊர்வலமாக காமராஜர் சிலைக்கு வந்தனர். இதில் கலை இலக்கிய அணி தலைவர் முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், பொதுக்குழு உறுப்பினர் கவி பாண்டியன், முகமது அனஸ்ராஜா, மகளிர் அணி தலைவர் ஸ்டெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

பா.ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், பொதுச்செயலாளர் முத்துபலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.வினர் முன்னாள் கவுன்சிலர் ஆபிரகாம், ராதா சங்கர் ஆகிய தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகத்தினர் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பிரகாஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் கண்ணன், தொகுதி செயலாளர் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் நெல்லை மாவட்ட செயலாளர் பாக்கியமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் நிர்வாகி வி.டபிள்யூ. வேளாளர் தலைமையில் மாலை அணிவித்தனர். மாவட்ட மாணவர் அணி தலைவர் ராம்குமார், நிர்வாகிகள் ஹரிசங்கர் பிள்ளை, முத்துக்குமார் பிள்ளை, சிவா, முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் இளைஞரணி தலைவர் ராஜகோபால் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட தலைவர் சஜி, தொண்டரணி தலைவர் ஜாகிர்உசேன், மாணவரணி தலைவர் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடார் மகாஜன சங்க அச்சக பிரிவு செயலாளரும், தி.மு.க. அயலக அணி சிங்கப்பூர் துணைச்செயலாளருமான மகா கிப்ட்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் அசோகன், டாக்டர் சார்லஸ், காமராஜ் யுவகேந்திரா ரவிக்குமார், அன்னை சங்கர், ஜான்ஸ் சுரேஷ், குன்னத்தூர் அரசு மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் நலச்சங்கத்தினர் மாநிலத் தலைவர் மரியஜான் நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொதுச் செயலாளர் டாக்டர் அந்தோணி ராஜ் நாடார், பொருளாளர் மாசிலாமணி நாடார், துணைத்தலைவர் ஜான்சன் நாடார், சேவியர் காலனி அந்தோணி நாடார், பிரிட்டோ, துணைச் செயலாளர்கள் கண்மணி நாடார், வின்சென்ட் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நெல்லை காமராஜர் மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் சார்லஸ்சாலமோன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். செயலாளர் டேவிட்ராஜ், பொருளாளர் கமலஸ் ஜார்ஜ், ஆரைக்குளம் ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டை நாடார் முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் மரியராஜா, செயலாளர் மகேஷ்குமார், பொருளாளர் ஜெபமாலை ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு நாடார் நல சங்கத்தினர் தென் மண்டல தலைவர் சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட துணைத்தலைவர் செல்வகணபதி, செயலாளர் விஜய், தச்சநல்லூர் மண்டல தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை மாவட்ட பிரபு மன்ற தலைவர் பாலசந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணைத் தலைவர் காசிமோகன், மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை தலைவர் கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்டத்தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், நிர்வாகிகள் செல்வக்குமார், முத்து, பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையிலும், தமிழர் உரிமை மீட்புகளத்தினர் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையிலும், தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையிலும், திராவிடத்தமிழர் கட்சியினர் மாவட்டச்செயலாளர் திருகுமரன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பள்ளி மாணவிகள்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் ஜெபமாலை, வனிதா, கல்யாணி, பிரதீபா ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தினர் மாவட்ட துணை செயலாளர் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் தனசேகரபாண்டியன், ராமலிங்கம், சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தேசிய மாணவர் அமைப்பினர் மகாலட்சுமி, ஆதித்தன், மணிகண்டன், கிருபாகரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புல்லட் ராஜா தலைமையில் இளைஞர்கள் நெல்லையில் ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிலை பராமரிப்பு குழு

நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, சிலைபராமரிப்பு குழு 5-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்தது.

இதைெயாட்டி அங்குள்ள காமராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த சிலைக்கு தலைவர் வித்யா கண்ணன், செயலாளர் சரத்மணி, பொருளாளர் தங்கவேலு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இலவச தையல் எந்திரம், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 50 மாணவர்கள் கல்வி உதவித் தொகை, காமராஜர் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இலவச வேட்டி-சேலை, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, விடுதி மாணவர்களுக்கு போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்