வாஞ்சிநாதன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-06-17 16:04 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவு தினம்

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள வாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு நகர தி.மு.க. சார்பில் நகரச்செயலாளா் எஸ்எம்.ரஹீம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் தென்காசி சட்டமன்ற உறுப்பினா் பழனிநாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகரத்தலைவா் ராமா், தென்காசி மாவட்ட பொருளாளரும், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா, மாநிலச்செயலாளா் செல்வராஜ், மாநில பேச்சாளா் எஸ்.ஆர்.பால்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அ.ம.மு.க.- பா.ஜனதா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் ராமசந்திரமூர்த்தி என்ற வினோத் தலைமையிலும், பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளா் மாரியப்பன் தலைமையிலும் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழ்நாடு பிராமணா் சங்க நிர்வாகிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்