அழகுமுத்துக்கோன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-07-11 20:05 GMT

நெல்லை:

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், மாநகர அவைத்தலைவர் வேலு என்ற சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் 35-வது வட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் கவுன்சிலர்கள் பரமசிவன், தானேசுவரன், முத்துலட்சுமி மற்றும் நிர்வாகிகள் ஜெகநாதன், மாசானம், ஆனந்தி, தங்க பிச்சையா, கிளாசிக் பாரத், மைதீன் கம்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், துணைத்தலைவர்கள் கவி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்