மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

திருச்செந்தூரில் மகாத்மாகாந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர்.;

Update: 2023-10-02 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு தூணுக்கும் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை, தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ஜெகநாதபெருமாள், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக காந்தி, காமராஜர் சிலைகளுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான வக்கீல் எஸ்.கே.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், நகர தலைவர் முருகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்