ஒண்டிவீரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-08-20 19:28 GMT

நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சந்திரசேகரன் எம்.பி., அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், இளைஞர் அணி செயலாளர் பால்துரை, கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், பகுதி செயலாளர் ஜெனி, பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் நெல்லை பரமசிவன், இசக்கிமுத்து, பொருளாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.

ம.தி.மு.க.வினர் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதாவினர் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் தீபா, பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி, சுப.நாகராஜன், முரளியாதவ், விநாயகர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

தமிழ் சிறுத்தைகள் கட்சியினர் தலைவர் அகத்தியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாநில செயலாளர் ஆறுமுகம், தலைமை நிலைய செயலாளர் தென்னரசு, மாவட்ட செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாநில குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆதி தமிழர் பேரவை

ஆதி தமிழர் பேரவையினர் தலைவர் அதியமான் தலைமையில் பாளையங்கோட்டையில் இருந்து ஊர்வலமாக மணிமண்டபத்திற்கு வந்து ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன், மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்புலிகள் அமைப்பினர் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நெல்லை வண்ணாா்பேட்டையில் இருந்து ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு வேன், கார்களில் ஊர்வலமாக வந்து ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நிறுவனத்தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பொதுச் செயலாளர் பாலமுருகன், தென்மண்டல அமைப்பு செயலாளர் முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலித் விடுதலை கட்சியினர் மாநில தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் ஒண்டிவீரன் தேசிய பேரவையினர் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் ஒண்டிவீரன் மணி மண்டபத்திற்கு திரளாகவந்து மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.இதனால் அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது ஒண்டிவீரன் நினைவு நாளை ஒட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்