காந்தி-காமராஜர் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

கரூரில் காந்தி-காமராஜர் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-10-02 17:54 GMT

காந்தி ஜெயந்தி

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவிந்தம்பாளையத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியம் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆசாத் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆசாத் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

காமராஜர் நினைவு தினம்

முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவிந்தம்பாளையத்தில் உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியம் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல கரூர் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை, நாடார் ஐக்கிய சங்கம், சமத்துவ மக்கள் கழகம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வேலாயுதம்பாளையம்

புகழூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலாயுதம்பாளையம் காந்தியார் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு புகழூர் நகர காங்கிரஸ் தலைவர் கமல் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் புகழூர் நகராட்சி உறுப்பினர் சுரேஷ், வட்டார தலைவர் சண்முகம், மகளிர் அணி செயலாளர் சவுபாக்கியம், நவலடி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்