அரசியல் கட்சியினர் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
நெல்லையில் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடினர்.;
நெல்லையில் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடினர்.
காங்கிரஸ் அலுவலகம்
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி முன்னாள் ராணுவ வீரர் சிவனைந்த பெருமாளை கவுரவித்தார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், இலக்கிய அணி தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பகுதி செயலாளர் மேகை சக்திகுமார், சிறுபான்மை அணி நிர்வாகி அப்துல் அஜீஸ், தாழை மீரான், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தலைவர் கே.எஸ்.தங்க பாண்டியன் தேசியக்கொடி ஏற்றி நல்லிணக்க உறுதிமொழி ஏற்றார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், துணைச் செயலாளர் கிருஷ்ணவேணி, யூனியன் கவுன்சிலர்கள் சரஸ்வதி செல்வசங்கர், ராஜாராம், திருப்பதி மணிகண்டன், முருகன், பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை சூப்பர் மார்க்கெட்டில் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தேசியக்கொடி ஏற்றி ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.