47 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி

நெல்லையில் 47 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணி நடந்தது.

Update: 2023-01-04 19:24 GMT

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்திலும் 3-வது தவணை போலியோ தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான மையங்களில் நடைபெற்றது.

பிறந்த குழந்தைகளுக்கு 2 தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இதை தவிர முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9-வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் 3-ம் தவணையாக போலியோ தடுப்பூசி போடப்பட்டது.

நெல்லை மாநகர பகுதியில் 10 சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 47 மையங்களில் போலியோ தடுப்பூசி போடப்பட்டது. மாநகர பகுதியில் நகர் நல அலுவலர் சரோஜா சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலை முதல் நேரில் சென்று ஆய்வு செய்தார். பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைனில் உள்ள மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில் டாக்டர் தமிழரசி தலைமையில் நடந்த முகாமினையும் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்