சிவகாசி,
சிவகாசி எஸ்.என்.புரத்தை சேர்ந்தவர் இந்துமதி (வயது 38). இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இந்துமதி தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள துணை போலீஸ் அலுவலகத்துக்கு அலுவல் பணி காரணமாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இந்துமதி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இந்துமதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து இந்துமதி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் அப்துல்ஜப்பார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.