போலீஸ்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
போலீஸ்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கபிலன் (2) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சந்தியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு சார் ஆட்சியர் ஆர்.அனாமிகா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.