நெல் அறுவடை எந்திரம் மோதி போலீஸ்காரர் சாவு

ஆற்காடு அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி போலீஸ்காரர் பலியானார்.

Update: 2023-04-16 17:44 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 28). இவர் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரரான இவர், ஆயுதப்படை கேண்டீனில் கேஷியராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்றுள்ளார். நாராயணபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த நெல் அறுவடை எந்திரத்திரம் கோபியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்