போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை
மதுரை பழங்காநத்தம், வி.கே.பி.நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜா (வயது 38). போலீஸ்காரரான இவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் சதீஷ்ராஜா வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று சதீஷ்ராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகராறு
இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சதீஷ்ராஜாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், அதிலிருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.