மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை: திருமணமான 4 மாதங்களில் சோகம்

மதுவில் விஷம் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை: திருமணமான 4 மாதங்களில் சோகம்.;

Update: 2022-12-16 21:41 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அபீனா (25). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் தனது மனைவியை வடகாட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் தமிழ்ச்செல்வன் திடீரென தன்னுடைய வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் 'தனக்கு வாழ பிடிக்கவில்லை. மன வேதனையுடன் இருப்பதாகவும், தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்