பொள்ளாச்சியில் போலீசார் அஞ்சலி

பொள்ளாச்சியில் போலீசார் அஞ்சலி

Update: 2023-07-08 20:30 GMT

பொள்ளாச்சி

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தனிப்பிரிவு போலீசார், போக்குவரத்து போலீசார் மறைந்த டி.ஐ.ஜி. உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று கோட்டூர், வால்பாறை, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திலும் டி.ஐ.ஜி. உருவப்படத்துக்கு போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்