கால்பந்து போட்டியில் போலீஸ் அணி வெற்றி
பாளையங்கோட்டையில் நடந்த கால்பந்து போட்டியில் போலீஸ் அணி வெற்றி பெற்றது.
நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் போலீஸ் அணிகள் என 16 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
மாலையில் நடந்த இறுதி போட்டியில் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி அணியும், நெல்லை போலீஸ் அணியும் மோதின. இதில் நெல்லை போலீஸ் அணி 3- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஹரி செய்து இருந்தார்.