தூத்துக்குடியில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் கண்காணிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-12 19:00 GMT

சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுதந்திர தினம்

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் வரும் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ெரயில் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், தர்மபெருமாள், போலீசார் கிருஷ்ணமூர்த்தி, சுதா, சுடலை, வீரபாண்டியன், பிரான்சிஸ் ஆகியோர் தூத்துக்குடி ெரயில் நிலையம், மீளவிட்டான் ெரயில் நிலையம், சிப்காட் ெரயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

ரோந்து படகுகள்

இதேபோல் கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான கடலோர பாதுகாப்பு போலீசார் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரோந்து படகுகளில் கடலுக்குள் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அதே போன்று தீவு பகுதிகளிலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்