சிவகிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
ஜனாதிபதி பதக்கம் பெற்ற சிவகிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோனையை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பாராட்டினார்.
சிவகிரி:
சிவகிரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சோனை. இவர் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஜனாதிபதி பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோனை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசிடமும் வாழ்த்து பெற்றார். இதுதவிர சிவகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் உள்ளிட்டோரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.