போலீஸ் உதவி செயலி மூலம் சைபர் குற்ற புகார்களையும் பதிவு செய்யலாம் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

போலீஸ் உதவி செயலி மூலம் சைபர் குற்ற புகார்களையும் பதிவு செய்யலாம் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி.

Update: 2023-04-06 22:50 GMT

சென்னை,

சென்னை மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறை சூப்பிரண்டு தீபா சத்யன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலீஸ் உதவி செயலி தொடங்கி 1 ஆண்டு நிறைவடைந்து விட்டது. 4.4.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் உதவி செயலியை தொடங்கி வைத்தார். கடந்த 1 ஆண்டில் இந்த செயலியை தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பேர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் 46 ஆயிரத்து 174 பேர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். இந்த செயலி 14 தலைப்புகளின் கீழ் 66 அம்சங்களை கொண்டுள்ளது. பொதுமக்களின் நலனுக்காக இது கொண்டுவரப்பட்டுள்ளது.

சைபர் குற்ற புகார்களையும் இதன் மூலம் பதிவு செய்யலாம். ஆனால் தமிழக மக்கள் தொகையில் 0.36 சதவீதம்பேர் தான் போலீஸ் செயலியை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். இது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் இதற்கு காரணம். இது பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

போலீஸ் உதவி செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்