பா.ஜனதா கொடியை கிழித்து எறிந்த மர்ம நபர்கள்

ஓமலூர் அருகே பா.ஜனதா கொடியை கிழித்து எறிந்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-10-21 19:07 GMT

ஓமலூர்

ஓமலூர் அருகே உள்ள இந்திரா நகர் மேச்சேரி பிரிவு ரோட்டில் ஓமலூர் மேற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது. இந்த கொடிக்கம்ப கொடியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து எறிந்தனர். மேலும் அவர்கள் கொடிக்கம்பத்தை எடுத்து சென்றுவிட்டனர். இதையடுத்து கட்சி கொடியை கிழித்ததுடன் கொடிக்கம்பத்தை திருடி சென்ற மர்ம நபர்களை கைது செய்ய கோரி ஒன்றிய தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் மேற்கு மாவட்ட துணை தலைவர் அருண் செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் பரத், ஓமலூர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணா தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவாரத்தை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்