இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள கீழாயூர் பகுதியில் புறவழி சாலையில் அமைந்துள்ள பாலத்தின் சுவர்களில் ஒரு சமூகத்தினரின் சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அனுமதியின்றி சுவர்களில் விளம்பரம் செய்ததாக பேரூராட்சி நிர்வாகம் அதை அழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் போலீஸ் நிலையம் அருகே முற்றுகையிட்டு குவிந்தனர். சிலர் சாலையில் உருண்டு, புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் ஏன் சுவர் விளம்பரத்தை அழித்தீர்கள்? என கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு போலீசார் இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.