காவல்நிலைய சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்

ஜோலார்பேட்டை காவல்நிலைய சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-13 16:18 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையின் பிரதான சாலையான காவல் நிலைய சாைலயில் பல அலுவலகங்கள் உள்ளன. அந்தச் சாலை திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில் பள்ளத்தை சரியாக மூடாததால் குண்டும் குழியுமாக உள்ளது. அகலமாக இருந்த சாலை குறுகி விட்டது எனவே சாலையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு வழி சாலையாக உள்ள காவல் நிலைய சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் எனவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்