பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதன் மகன் லட்சுமணன் (வயது 24). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவரும், அதே பகுதியில் உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் நர்சிங் கல்லூரி மாணவியான கற்பகவல்லி (22) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 14-ந் தேதி ஆத்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பாப்பாரப்பட்டி போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்து தம்பதியரை லட்சுமணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.