அரியலூரில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூரில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-08 17:48 GMT

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடந்தது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 16 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர் கணேஷ் (அரியலூர்), ராஜா சோமசுந்தரம் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்