போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம்

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது.

Update: 2023-08-30 17:59 GMT

அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. அரியலூரில் நடந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கானும், பெரம்பலூரில் நடந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அரியலூரில் நடந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 17 மனுக்களும், பெரம்பலூரில் நடந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 43 மனுக்களும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் போலீசாரின் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். பெரம்பலூரில் முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்லவும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்